விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை
வடமேற்கு பிரதேசத்தில் உள்ள யெல்லோநைஃப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சர்வதேச விமானத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கனடாவின் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை KLM601 என்ற விமானம், ஒரு பயணி சலனமற்றிருந்த நிலையில் யெல்லோநைஃப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
34 வயதான குறித்த பெண் பயணி மருத்துவமனையில் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அவரது அடையாளம் மற்றும் மரணத்தின் காரணம் குறித்து இதுவரை விவரங்கள் வெளியிடப்படவில்லை.
KLM601 விமானம் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருத்துவ அவசர நிலை காரணமாக கனடாவின் யெல்லோநைஃப் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியுள்ளது.