பிரிட்டிஸ் கொலம்பிய பஸ் விபத்தில் 4 பேர் பலி
பிரிட்டிஸ் கொலம்பியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பனி படர்ந்த அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்த பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் 97சீ அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகாமையில் காணப்பட்ட நான்கு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பகளுக்கு மாகாண அரசாங்கம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
அல்பர்ட்டாவை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனமொன்றின் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கனேடிய றாயல் பொலிஸார் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் இந்த விபத்து இடம்பெற்றமை மக்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.