கனடாவில் பொலிஸ் வாகனத்தில் மோதிய நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!
கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் பொலிஸ் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
31 வயதான நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சஸ்கட்ச்வானின் பஃபல்லோ நெரொவ்ஸ் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக பயணித்த வாகனத்தில் குறித்த நபர் மோதுண்டு உள்ளார்.

இந்த சம்பவத்தில் பாதசாரி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிர் இழந்தவர் தொடர்பில் பொலிஸார் அவரது குடும்பத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        