கனடாவில் இந்த வகை சீஸ்கள் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் விற்பனை செய்யப்படும் சீஸ் வகைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்டாரியோவில் விற்கப்பட்ட சில காமெம்பெர்ட் சீஸ் பொருட்கள் ‘லிஸ்டீரியா’ பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த சீஸ் வகைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு முகவர் நிறுவனம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
திரும்பப் பெறப்படும் சீஸ் வகை Mon Père என்ற பண்டக்குறியைக் கொண்ட காமெம்பெர்ட் சீஸ் வகையாகும்.
இது டொரோண்டோவில் ரிப்ப்லி அவென்யூவில் அமைந்துள்ள ‘சீஸ் புட்டிக்’ கடையில் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சீஸ் 250 கிராம் பாக்கெட்டில் விற்கப்பட்டதுடன், ஆகஸ்ட் மற்றும் ஜூலை மாதங்களை காலாவதி திகதியாகக் கொண்டவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிதொரு நாட்டிலும் இந்த வகை சீஸ் மீளப்பெறுதல் அறிவிப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்டாரியோவில் இருந்து இந்தப் பொருள் தளங்களில் இருந்து அகற்றப்படுவதாக கனடிய உணவு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை கனடாவில் இந்த சீஸ் பயன்படுத்தியதால் நோய் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என குறிப்பிடப்படுகின்றது.
மீளப்பெறப்பட்ட பொருளை உபயோகித்து உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கருதினால் மருத்துவரை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.