வாழ்க்கையில் எப்பொழுதும் சொந்த வீடு வாங்க முடியாது என கருதும் கனேடியர்கள்
அதிக எண்ணிக்கையிலான கனேடிய மக்கள் வாழ்நாளில் தங்களினால் வீடு ஒன்றை கொள்வனவு செய்ய முடியாது என கருதுகின்றனர்.
அண்மையில் Mortgage Professionals Canada நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய குறிப்பிடத்தக்களவான மக்கள் தங்களினால் வாழ் நாளில் வீடு வாங்க முடியாது என கருதுகின்றனர்.
வீடு கொள்வனவு செய்யக்கூடிய இயலுமை தொடர்ச்சியாக இழக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வீடுகளின் அதிக விலை மற்றும் வட்டி வீத அதிகரிப்பு போன்ற காரணிகளினால் வீடு கொள்வனவு செய்வது முடியாத காரியம் என மக்கள் கருதுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 60 வீதமானவர்கள் பணவீக்கம் தொடர்பில் கூடுதல் கவலை கொண்டுள்ளதாக கருத்துக் கணிப்பின் ஊடாக மேலும் தெரியவந்துள்ளது.