என்னுடைய இதயமே நொறுங்கிவிட்டது! கனடாவிலிருந்து உறவுகளுக்காக துடிக்கும் நெஞ்சங்கள்
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகம் முழுவதுமே கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனாவின் 2வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, இந்தியாவில் மட்டும் தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டத் தொடங்கிவிட்டன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசித்து வரும் மக்கள், இந்தியாவில் தங்களது உறவுகளை எண்ணி கவலையுடன் இருக்கின்றனர், எதுவும் செய்ய முடியாதவர்களாய் இருக்கிறோம் என தன்னுடைய குடும்பத்தினருக்காக துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவ மாணவரான Sukhmeet Singh Sachal என்பவர் கூறுகையில், என்னுடைய குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்றியிருக்கிறது, அங்குள்ள மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமலும், ஆக்சிஜன் இல்லாமலும் அல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
என்னுடைய குடும்பத்துக்காக எதையும் செய்யமுடியவில்லை என நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது, மருத்துவமனைக்கு சென்றாலும் இடமில்லை என்றே திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் சாதாரணமாக $8 கிடைக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தற்போது, கள்ளச்சந்தையில் $800க்கு விற்கப்படுவதாகவும் மனம் நொந்து பேசியுள்ளார்.