கனடாவில் காணாமல் போன 21 வயது பெண் சடலமாக மீட்பு
கனடாவின் Bridgewater, Nova Scotia பகுதியில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 21 வயது இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் Finn McDormand என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
பொலிஸாரின் தகவலின்படி, Gow’s Home Hardware என்ற கடையில் பெற்றோருடன் இருந்தபோது, திடீரென அங்கிருந்து ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பிரச்சினைகள் காரணமாக அவர் நலன் குறித்து குடும்பத்தினரும் பொலிஸாரும் கவலை தெரிவித்திருந்தனர்.
பின்னர் Bridgewater Police Service K9 பிரிவு மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, Forest Hill Road அருகிலுள்ள தனிமையான காடுப்பகுதியில் புதன்கிழமை அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த மரணம் சந்தேகத்திற்கிடமானதாக கருதப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை தொடர்வதால் மரணத்திற்கான காரணம் குறித்து தற்போது கூடுதல் தகவல்களை வழங்க முடியாது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் அந்தப் பகுதியை பொதுமக்கள் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.