ஒட்டாவாவில் இளைஞரின் உடல் பாகங்கள் மீட்பு
ஒன்டாரியோ மாகாணத்தில் ஒட்டாவா நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து நார்த் பே (North Bay) ஒன்டாரியோ மாகாண காவல்துறையின் குற்றப் பிரிவு தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளது.
26 வயதான ஹகீம் முஹிகிரா (Hakeem Muhikira) என்பவரின் உடல் பாகங்கள், கடந்த 28ஆம் திகதி காலை 8 மணியளவில், ஹெட் கிளாரா மற்றும் மாரியா நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த பகுதி நார்த் பே மற்றும் ஒட்டாவா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளதுடன், மத்தாவா (Mattawa) நகரத்திற்கு அடுத்ததாக உள்ளது.
இந்த சம்பவத்தில் கொலை அல்லது சந்தேக மரணம் உள்ளதா, அவர் எப்பேர்து உயிரிழந்தார், உடல் பாகங்கள் துல்லியமாக எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுபோன்ற முக்கிய தகவல்களை காவல்துறை இதுவரை வெளியிடவில்லை.