குப்பை எடுப்பவரை அகற்றுமாறு கோரிய பெண்; புகைப்படவடிவமைப்பாளர் கொடுத்த பதிலடி
பிரித்தானியாவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் என்ற பிரபலமான புகைப்பட வடிவமைப்பாளர், மக்களின் புகைப்படங்களில் சுவாரஸ்யமான மற்றும் வேடிக்கையான திருத்தங்களைச் செய்வதில் பெயர் பெற்றவர்.
ஜேம்ஸ் ஃப்ரிட்மேனின் புகைப்பட வடிவமைப்பு சுவாரஸ்யமாக இருப்பதால் மக்கள் , தானாக முன்வந்து தங்கள் புகைப்படங்களை வடிவமைத்து தருமாறு அனுப்புகிறார்கள்.
இந்நிலையில் , ஒரு பெண் ஸ்பெயினின் வலென்சியாவில் வரலாற்று நினைவுச்சின்னத்தின் முன் எடுத்த புகைப்படத்தை அனுப்பி தனக்குப் பின்னால் குப்பைகளை எடுப்பவரை அகற்றுமாறு ஃப்ரிட்மேனிடம் கேட்டார். குப்பைகளை எடுப்பவரை அகற்றுமாறு பெண்னுக்கு ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் சிறந்த பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, புகைப்படத்திலுள்ள குப்பைகளை எடுப்பவரை அகற்றி, அவரது படத்தில் அதிகமான குப்பைகளைச் சேர்த்து பதிலடி கொடுத்துள்ளார் ஜேம்ஸ் ஃப்ரிட்மேன் .
— James Fridman (@fjamie013) June 7, 2023
உண்மையாகவே இவங்க (துப்பரவு பணியார்கள்) இல்லனா, நாம இல்லை. துப்பரவு வேலைகளைச் செய்பவர்கள் நம் அன்றாட வாழ்வில் எப்படி முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, எப்படி ஒரு புகைப்படத்தை வடிவமைப்பு ‘எடிட்’ செய்யப்படக்கூடாது என்பது பற்றிய முக்கியமான செய்தியையும் அவர் கொடுத்துள்ளார். குறித்த புகைப்படத்தை 14.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளதோடு, கருத்துக்களையும் பதிவுசெய்துள்ளார்கள்.
அதோடு ஃபிரிட்மேனின் அறிவார்ந்த செயலுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.