குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தும் கனடியர்கள்? ஏன் தெரியுமா
கனடாவில் வாடகை தொகை அதிகரிப்பு காரணமாக அநேகமானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் இவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
18 முதல் 33 வீதமானவர்கள் இவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலமும் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அதிகளவான வாடகைத் தொகைக்கு சிறிய வீடுகளில் அல்லது குடியிருப்புகளில் வசித்து வரும் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தயக்கம் காண்பித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதனை காலம் தாழ்த்துவதாக பல இளம் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் வீடுகளுக்கு காணப்படும் தட்டுப்பாட்டு நிலைமை மற்றும் வீட்டு வாடகை அதிகரிப்பு போன்ற காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.