கனடாவில் கொரோனா தடுப்பு மாத்திரையை அங்கீகரிக்குமாறு கோரிக்கை!
கனடாவில் கொரோனா தடுப்பு மாத்திரையை அங்கீகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பதிலீடாக பயன்படுத்தப்படக்கூடிய பைசர் மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவில் சுகாதார மற்றும் மருத்துவ துறைகளில் காணப்படும் ஆளணி வளப் பற்றாக்குறைக்கு தீர்வாக இவ்வாறு மாத்திரைகள் வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் தலைவருமான வைத்தியர் கெவின் சுமித் (Kevin Sumith) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Omicron வைரஸ் தொற்று உறுதியாளர்களைப் போனறே வீதி விபத்துக்கள், இருதய நோய்கள், மாரடைப்பு போன்ற பல்வேறு அவசர நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.