அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கை; ரஷ்யாவுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி
அமெரிக்க அரசாங்கத்திடம் உக்ரைன் ஐனாதிபதி வோலோடிவிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) , ரஷ்யாவில் உள்ள சகல அமெரிக்க நிறுவனங்களையும் அங்கிருந்து வெளியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க காங்கிஸில் காணொளி வாயிலாக உரையாற்றிய அவர் (Volodymyr Zelenskyy) , ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை மேலும் அதிகரிக்கவேண்டும் எனவும் கோரிக்கே விடுத்தார்.
அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு அவர் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். உலகின் முன்னனி நாடான அமெரிக்காவின் தலைவர் சிறந்த தலைவராக இருப்பார் எனவும் குழந்தைளின் மரணங்களை தடுக்க முடியாவிட்டால் வாழ்க்கையில் எந்த அர்தமும் இல்லை எனவும் உக்ரைன் ஐனாதிபதி (Volodymyr Zelenskyy) குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் வடக்கு நகரான செர்பனிஹிவில் 10பொது மக்களை ரஷ்யா கொன்றுள்ளதாக உக்ரைன் அமெரிக்க தூதரகத்தின் உத்தியோக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொல்லப்பட்ட அனைவரும் உணவு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள்எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.