வெளிநாடுகளில் வாழும் கனேடியர்கள் விடுக்கும் கோரிக்கை
தேர்தல்களில் வாக்களிப்பதில் உள்ள தடைகளை நீக்கி, வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என வெளிநாடுகளில் வாழும் கனேடியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் கனேடியர்களில் சுமார் 3.5 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர்.
எனினும், அவர்களது வாக்குப்பதிவு மிகக் குறைந்த சதவீதத்திலேயே பதிவாகி வருகிறது 37 நாட்கள் கொண்ட குறுகிய தேர்தல் காலம் வெளிநாட்டவர் வாக்களிக்க போதுமானதாக இல்லை.

அத்துடன், சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு அஞ்சல் துறைகளை நம்பியிருக்க வேண்டியுள்ளதால், வாக்குச் சீட்டுகள் உரிய நேரத்தில் வந்து சேருவதில் சிக்கல் நிலவுகிறது.
இந்தநிலையில் தூதரகங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயங்களில் நேரடியாக வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று வெளிநாடுகளில் வசிக்கும் கனேடியர்கள் கோரியுள்ளனர்.
பல நாடுகள் பின்பற்றுவது போல இணையவழி வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்தலாம். தேர்தல் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் வெளிநாட்டில் உள்ள கனேடியர்களுக்கு வழங்கப்பட்ட 101,690 வாக்குச் சீட்டுகளில் 57,440 வாக்குகள் மட்டுமே சரியான நேரத்தில் கிடைத்து எண்ணப்பட்டன.
20,013 வாக்குச் சீட்டுகள் காலதாமதமாக வந்ததால் நிராகரிக்கப்பட்டன. ஏனையவை தகவல்கள் குறைபாடு அல்லது திருப்பி அனுப்பப்படாத காரணங்களால் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.