தென்கொரிய ஜனாதிபதி பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்
தென்கொரிய ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று(14) நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் மொத்தம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக 204 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் பதிவாகின. 3 பேர் வாக்களிக்க மறுத்தனர்.
இதன்படி தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளதால் யூன் சுக் பாராளுமன்றத்தால் ஒருமனதாக பதவிநீக்கம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் பதவி நீக்கத்தை உறுதிப்படுத்தி வாக்களித்தால், யூன் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்.
யூனை பதவி நீக்கம் செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து தீர்ப்பளிக்க நீதிமன்றத்திற்கு 180 நாட்கள் வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.