கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்; அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!
கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு மத்தியில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதன் குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட சமீபத்திய பயண ஆலோசனையில், கனடாவை நிலை மூன்றிற்கு அமெரிக்கா உயர்த்தியுள்ளதுNova Scotia மாகாணம் COVID தொற்றின் அதிகரிப்பு காரணமாக Halifax பகுதிக்கான முழு பூட்டுதல் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இதேவேளை Nova Scotia வியாழக்கிழமை 38 புதிய தொற்றுக்களை அறிவித்தது. இது ஏறக்குறைய ஒரு ஆண்டில் பதிவான மிகப்பெரிய ஒற்றை நாள் தொற்றுக்களின் அதிகரிப்பாகும்.
இந்த நிலையில் தொற்று பரவுவதை தடுக்க உதவும் வகையில் மாகாணத்தின் முதல்வர் Halifax பகுதியில் சில சமூகங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை வியாழக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.