8 ஆண்டுகளின் பின்னர் எஜமானரிடம் சேர்க்கப்பட்ட பூனை;நெகிழ்ச்சி சம்பவம்
கனடாவின் மொன்றியலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பூனை ஒன்று அதன் எஜமானரிடம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பூனை ஓட்டோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹுமன் சொசைட்டி என்ற நிறுவனம், குறித்த பூனையை அதன் எஜமானருடன் சேர்த்துள்ளது.
குறித்த பூனையின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ சிப் மூலம் உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மைக்ரோ சிப் பரிசோதித்த போது அதன் உரிமையாளர்கள் பற்றிய விபரங்களை கண்டறிய முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மைக்ரோ சிப்க்கள் மூலம் செல்ல பிராணிகளின் அடையாளத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் காணப்படுகின்றது.
இந்த தொழில்நுட்பம் காணாமல் போகும் செல்லப் பிராணிகளை அவர்களின் உரிமையாளர்களிடம் கொண்டு சேர்க்க உதவுகின்றது குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.