திருமணம் செய்தால் பெரும் தொகை சன்மானம் ; ஊழியர்களுக்கு துபாய் செல்வந்தரின் அதிரடி ஆஃபர்!
பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், துபாயைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர், இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ள எமிராட்டி ஊழியர்களுக்கு 50,000 திர்ஹாம் (சுமார் ரூ. 12.5 லட்சம்) மானியத்தை அறிவித்துள்ளார்.
அல் ஹப்தூர் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கலஃப் அகமது அல் ஹப்தூர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இளைஞர்களைக் குடும்பம் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், இந்த மாத தொடக்கத்தில் இந்த 'திருமண மானியத்தை' அறிவித்தார்.

திருமணம் செய்தால் 50,000 திர்ஹாம் சன்மானம்
திருமணம் செய்தால் 50,000 திர்ஹாம் சன்மானம். குழந்தை பிறந்தபின் ஈராண்டில் அந்தத் தொகை இரட்டிப்பாகும் என அதிரடி ஆஃபரை துபாயைச் சேர்ந்த செல்வந்தர் வழங்கியுள்ளமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது
. வியக்க வைக்கும் அந்தச் சலுகையைத் தமது ஊழியர்களுக்கு துபாயைச் சேர்ந்த செல்வந்தர் காலஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor)வழங்கியுள்ளார் .
"திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆகியவை தனிப்பட்ட முடிவுகள் மட்டுமல்ல.நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஆற்றவேண்டிய முக்கிய கடமைகள்," என அவர் கூறியுள்ளார். அரசாங்க முயற்சிகள் ஒரு புறம் இருக்க நாட்டிலுள்ள அனைவரும் திருமணம் செய்யவும், பிள்ளைகள் பெற்றுக்கொள்ளவும் ஊக்குவிக்க முயற்சிகள் எடுப்பது முக்கியம் என்றும் காலஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor) வலியுறுத்துகின்றார்.
அதோடு இணக்கமான சமூகம், வலுவான தேசம் உருவாகக் குடும்பங்களின் பங்களிப்பு அவசியம் என்றும் காலஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor) வலியுறுத்தினார்.