முஸ்லிம் எதிர்ப்பு கருத்து வெளியிட்ட அல்பர்ட்டா மனித உரிமை பிரதானிக்கு ஏற்பட்டுள்ள நிலை
அல்பர்ட்டா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதானியாக கடமையாற்றி வரும் கொலின் மேவை பதவி விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதனால் இந்த நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
அல்பர்ட்டாவின் நீதி அமைச்சர் டைலர் சான்ட்ரோ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். கனேடிய தேசிய முஸ்லிம் பேரவை உள்ளிட்ட 28 முஸ்லிம் அமைப்புக்கள் மேவிற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டில் மே முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்பர்ட்டா மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதானியாக கடந்த 2019ம் ஆண்டு மே நியமிக்கப்பட்டார்.
இஸ்லாமிய மதம் இராணுவமயமான தன்மையைக் கொண்டது என மே கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தக் கருத்து தொடர்பில் முஸ்லிம் சமூகம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதானியான மேவை பதவி விலகுமாறு மாகாண நீதி அமைச்சர் கோரியுள்ளார்.