இலங்கையர் உட்பட முக்கியஸ்தர்களின் வாய்ப்பை பிடுங்கிய ரிஷி சுனக்!
தற்போதைய இக்கட்டான சூழலை எதிர்கொள்ள செயல் திறம் மிகுந்தவர்களுக்கு தமது அமைச்சரவையில் வாய்ப்பளிக்க இருப்பதாக பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) வாக்குறுதி அளித்துள்ளார்.
அந்தவகையில் பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) புதிய அணியில் யார் யார் என்ற பட்டியல் கசிந்துள்ளது. நிதியமைச்சராக ஜெர்மி ஹன்ட்(Jeremy Hunt) தொடர்வார் என்றே கூறப்படுகிறது.
ஆனால் அமைச்சரவையில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என்றே கூறுகின்றனர்.இதனால், போரிஸ் ஜோன்சன்(Boris Johnson) மற்றும் லிஸ் ட்ரஸ்(Liz Truss)ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளித்து, கட்சியின் ஒருமித்த ஆதரவைப் பெற ரிஷி (Rishi Sunak)முயற்சிப்பார்.
இருப்பினும், ஜேக்கப் ரீஸ்-மோக்(Jacob Rees-Mogg), வெண்டி மோர்டன் (Wendy Morton)மற்றும் ரணில் ஜெயவர்தன (Ranil Jayawardena)ஆகியோர் பதவிகளை இழக்க நேரிடும்.
அது மட்டுமின்றி, தமது ஆதரவாளர்களான டொமினிக் ராப்(Dominic Raab), சஜித் ஜாவித்(Sajid Javid), மெல் ஸ்ட்ரைட்(Mel Streide ) மற்றும் ஜான் க்ளென்(John Glenn) ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படும்.
ஆனால் பென் வாலஸ்(Ben Wallace) தமது பாதுகாப்பு அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றே கூறப்படுகிறது. போரிஸ் ஆதரவாளரான பென் வாலஸ்(Ben Wallace) தமது முழு ஆதரவையும் ரிஷிக்கு(Rishi Sunak) அளிப்பதாக கூறியிருந்தும், வாய்ப்பு மறுக்கப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
லிஸ் ட்ரஸ்(Liz Truss) தமது ஆதரவாளர்களுக்கு மட்டுமே அமைச்சரவையில் வாய்ப்பளித்த நிலையில், ரிஷி (Rishi Sunak)தமது கட்சியில் செயல் திறம் மிகுந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்பொருட்டு, இரவு வெகு நேரம் வரையில் தமது ஆலோசகர்களுடன் தீவிர கலந்தாலோசனையில் ரிஷி(Rishi Sunak) சுனக் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. பிரதமர் போட்டியில் தம்முடன் இருந்த இன்னொரு வேட்பாளரான பென்னி மோர்டான்ட்(Benny Mordant)முக்கிய பொறுப்புக்கு கொண்டுவரப்படலாம்.
அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக்(Matt Hancock), சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman)ஆகியோரும் புதிய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.