பிரித்தானிய பிரதமர் பதவிக்கு வலைவீசும் ரிஷி சுனக்!
பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியைச் (Conservative Party) சேர்ந்த ரிஷி சுனக்(Rishi Sunak) பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரதமர் போட்டியில் தோல்வி கண்ட சில வாரங்கள் கழித்து அவரின் அறிவிப்பு வந்துள்ளது.
முன்னாள் நிதி அமைச்சரான அவர் பிரிட்டனைப் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீட்கப்போவதாகவும் கட்சியை ஒன்றிணைக்கப்போவதாகவும் கூறினார்.
42 வயது சுனாக் பிரதமர் போட்டியில் களமிறங்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் 2ஆவது வேட்பாளர்.
ஏற்கனவே பிரித்தானியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் பென்னி மோர்டான்ட் (Penny Mordaunt) பிரதமர் பொறுப்பைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்குவதாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனும்(Boris Johnson )போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.