கனேடியர்கள் கடன் அட்டைகளை இப்படி பயன்படுத்துகின்றார்களா?
நிதி ரீதியான நெருக்கடிகளுக்கு குறுகிய கால அடிப்படையிலான தீர்வாக கனேடியர்கள் கடன் அட்டைகளை கூடுதலாக பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்க அதிகரிப்பினால் கனடாவில் வாழ்க்கைச் செலவு உயர்வடைந்துள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை சமாளிப்பதற்காக மக்கள் கூடுதலாக கடன் அட்டைகளை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் காலாண்டுக்கும் இரண்டாம் காலாண்டுக்கும் இடையில் கடன் அட்டை மீதி 6.4 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
குறுகிய கால தீர்வாக இவ்வாறு கடன் அட்டையை பெற்றுக் கொண்டாலும் நீண்ட கால அடிப்படையில் கடனை மீளச் செலுத்துவதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் கடன் அட்டைகளின் மூலம் கூடுதலாக செலவழிக்கின்றார்கள் என்பதுடன் கூடுதலாக கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.
அடகுக் கடன் தொகையல்லா கடன் தொகை அதிகரிப்பானது ஆபத்தான பொருளாதார நிலைமையை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் அதிகளவு கடன் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட மாகாணமாக அல்பர்ட்டா காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகளை போதியளவு தெளிவுடன் பயன்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.