ஈரான் போரால் பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்!

Food Shortages United Kingdom Iran-Israel War
By Sulokshi Mar 23, 2026 06:14 AM GMT
Report

   வளகுடாவில் போர்ச் சூழல் காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என பிரிடன் தேசிய விவசாயிகள் சங்கம் (NFU) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் – இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடந்த மூன்று வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஈரான் போரால் பிரித்தானியாவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்! | Risk Of Rising Food Prices In Uk Iran War

இது விவசாய உற்பத்திச் செலவை நேரடியாகப் பாதித்துள்ளதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டோம் பிராட்ஷா (Tom Bradshaw) வழங்கிய தகவலின்படி, அடுத்த 6 வாரங்களில் தக்காளி, வெள்ளரிக்காய் மற்றும் மிளகாய் (Peppers) போன்ற பசுமைக்குடில் (Glasshouse) விளைபொருட்களின் விலை உயரும்.

 அடுத்த 3 முதல் 6 மாதங்களில் பால் மற்றும் ஏனைய பயிர் வகைகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பாக, விவசாய இயந்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் ‘சிவப்பு டீசல்’ (Red Diesel) விலை உயர்வு விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் இந்த எரிசக்தி நெருக்கடி குறித்து விவாதிக்க, பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரக்காலக் குழுவான ‘கோப்ரா’ (Cobra) அடுத்த வாரம் கூடி ஆலோசிக்கவுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வுடன், பெட்ரோல் விலை மற்றும் வீட்டு எரிசக்தி கட்டணங்கள் குறித்தும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. இதேவேளை, பிரித்தானிய சில்லறை விற்பனை கூட்டமைப்பு (BRC), கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் பொருட்களின் தட்டுப்பாட்டிற்கும் விலை உயர்விற்கும் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளது.

அதேவேளை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எரிபொருள் விற்பனையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிரித்தானிய விவசாயத்துறை அமைச்சர் ஏஞ்சலா ஈகிள் (Angela Eagle), தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US