ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை ; பொலிஸார் தீவிர விசாரணை

Sri Lanka Police Trincomalee Sri Lanka Police Investigation Crime
By Sahana Mar 19, 2026 11:15 AM GMT
Report

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே இரவில் மூன்று வீடுகளை இலக்காகக் கொண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (19) அதிகாலை சுமார் 2.30 மணியளவில், குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் ஜன்னல் கம்பிகளை அகற்றி உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

ஒரே இரவில் மூன்று வீடுகளில் கொள்ளை ; பொலிஸார் தீவிர விசாரணை | Robbery Three Houses On Night Police Investigating

முதல் வீட்டில் சுமார் 10 பவுன் தங்க நகைகள், இரண்டாம் வீடு: 70,000 ரூபாய், மூன்றாம் வீடு: 5 குவைத் தினார் மற்றும் 30 இந்திய ரூபாய் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த தம்பலகாமம் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது பயன்படுத்தப்பட்ட பொலிஸ் மோப்ப நாய், கொள்ளை நடைபெற்ற வீடுகளிலிருந்து புறப்பட்டு, சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாகக் கருதப்படும் ஒரு வீட்டிற்குள் இரண்டு முறை சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த வீட்டில் இருந்த நால்வரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனுடன், கைரேகை அடையாள நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US