45 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட பிரபல நடிகர் மென்று துப்பிய சூயிங்கம்!
அன்லைனில் 45 லட்சத்திற்கு சூயிங்கம் ஏலம் விடப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவது,
ebayல் சூயிங்கத் துண்டு ஒன்று ஏலத்தில் 45 லட்சம் ரூபாய்க்கு விடப்பட்டுள்ளமையும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திரைபடங்களில் அயர்ன் மேனாக நடித்து பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியர் (Robert Downey Jr) மென்று துப்பிய சூயிங்கமே இவ்வாறு 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற ஜான் ஃபேவ்ரூவின் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் ஸ்டார் விழாவில் அயர்ன் மேன் ராபர்ட் டவுனி ஜூனியர் தான் மென்ற பசையை எடுத்து ஃபவ்ரூவின் நட்சத்திரத்தின் மீது நகைச்சுவையாக ஒட்ட, அதனை ஈபே பயனர் ஒருவர் எடுத்து விற்பனைக்கு வைக்க முடிவு செய்துள்ளார்.
அதையடுத்து குறித்த சூயிங்கம் 45 லட்சம் ரூபாய்க்கு ரசிகர் ஒருவரால் ஏலம் விடப்பட்டமையால் இந்த ஏலத்தால் இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டுவிட்டரின் பெரும் பகுதியினர், சூயிங்கத்திற்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் அளவுக்கு மக்கள் எப்படி பைத்தியமாக இருக்கிறார்கள் என்றும் ஏலத்தில் வெற்றி பெறுபவர் அயர்ன் மேன் நடிகரின் டிஎன்ஏவை வைத்திருக்க முடியும் என்று சிலர் கூறியுள்ளனர்.