தன்னை உருவாக்கியவரையே தாக்க முற்படும் ரோபோ ; வைரலாகும் வீடியோ
உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் சில நன்மைகளும், சில தீமைகளும் நடைபெறத்தான் செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடி கட்டி பறக்கும் சீனா, ரோபோவைக்கொண்டு பல ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறது.
ஒரு தொழிற்சாலையில் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் போது ரோபோ செயலிழந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்க முயற்சிக்கும் காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.
வைரல் வீடியோ
ஒரு தொழிற்சாலையில் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் பணியில் இருவர் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ரோபோ செயலிழந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி செல்கின்றனர்.
பின்பு, திரும்பி வந்து ரோபோவை பழைய நிலைமைக்கு கொண்டுவருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது. மேலும் பேசுபொருளாகி உள்ளது.
An AI robot attacks its programmers as soon as it is activated in China. pic.twitter.com/d4KUcJQvtD
— Aprajita Nefes 🦋 Ancient Believer (@aprajitanefes) May 2, 2025