மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும் தங்கள் உடையால் கனடாவுக்கு தெரிவித்துள்ள ஆதரவு
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கனடா மன்னர் சார்லசின் ஆளுகையின் கீழிருக்கும் நாடு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும்!
ராஜ குடும்பத்தைப் பொருத்தவரையில், அவர்கள் அணியும் ஒவ்வொரு உடையின் பின்னாலும் ஒரு அர்த்தம் இருக்கும்.
அப்படித்தான் தங்கள் உடையின் மூலம், கனடா நாடு மன்னரின் ஆளுகையின் கீழிருக்கும் நாடு என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் மன்னர் சார்லசும் இளவரசி கேட்டும்!
ஆம், கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி மன்னர் சார்லசை பக்கிங்காம் அரண்மனையில் சந்திக்கும்போது, மன்னர் சார்லஸ் சிவப்பு நிற கழுத்துப்பட்டை (tie) அணிந்திருந்தார்.
அதேபோல, பிரித்தானியாவின் வருங்கால ராணியான இளவரசி கேட்டும், லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் தின நிகழ்ச்சியின்போது சிவப்பு நிற உடை அணிந்திருந்தார்.
அத்துடன், பிரித்தானிய துணைப்பிரதமரான ஏஞ்சலா ரேய்னரும் சிவப்பு வண்ன உடைதான் அணிந்திருந்தார்.
சிவப்பு நிறம் கனடாவுடன் தொடர்புடைய நிறமாகும். அத்துடன், காமன்வெல்த் அமைப்புடனும் தொடர்புடையது சிவப்பு வண்ணம்.
ஆக, ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக சத்தம் போட்டுக்கொண்டே இருக்க, மன்னரோ, அமைதியாக, கனடா தங்கள் நாடு என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.
அவருடன் இளவரசி கேட்டும், துணை பிரதமரும் அதையே அழுத்தமாக பதிவு செய்துள்ளார்கள் என்கிறார் கனடா உயர் ஸ்தானிகரான Ralph Goodale. ராஜ குடும்ப நிபுணர்களும் இதே கருத்தையே வழிமொழிந்துள்ளார்கள்!