கனடாவின் முரட்டுத்தனமான மக்களைக் கொண்ட நகரம்?
கனடாவின் மிகவும் முரட்டுத்தனமான நகராகவும் பவ்யமான நகராகவும் ஒன்றாறியோ மாகாணத்தின் இரண்டு நகரங்கள் தெரிவாகியுள்ளன.
அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இணைய வழியாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 44 நகரங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்து இந்த கருத்துக்கணிப்புக்கான தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
நகரங்களில் மக்களின் நடத்தைகள் தொடர்பில் இந்த கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முரட்டுத்தனமான மக்களைக் கொண்ட நகரங்களின் வரிசையில் முதல்நிலை பெற்றுக்கொண்ட நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் வோன் நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பவ்வியமான மக்களைக் கொண்ட நகரங்களின் வரிசையில் முதலிடத்தில் ஒன்றாறியோ மாகாணத்தின் மார்க்கம் நகரம் திகழ்கின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.