ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான ரயில் பெட்டிகள் சிறைப்பிடிப்பு; அதிரடி காட்டிய உக்ரைன்!
ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான உரங்களை ஏற்றிக்கொண்டு உக்ரைனுக்குள் சுங்கவிதிகளை மீறி நுழைந்த சட்டவிரோதமாக நுழைந்த 315 ரயில் பெட்டிகளை உக்ரைன் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால், உலக அளவில் தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் உலக அரங்கில் கடுமையான உரத் தட்டுபாடும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான உரங்களை ஏற்றிக்கொண்டு உக்ரைனுக்குள் நுழைந்த 315 ரயில் பெட்டிகளை அந்த நாட்டின் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
இவற்றில் உக்ரைனிய நாணய மதிப்பில், சுமார் 360 மில்லியன் ஹ்ரிவ்னியாக்களுக்கும், டாலர் மதிப்பில் சொல்லவேண்டும் என்றால் 12 மில்லியன் டாலர் மதிப்புள்ள உரங்கள் அடைக்கப்பட்டு இருந்தாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.