உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் ; 4 குழந்தைகள் உட்பட 19 பேர் பலி
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா இன்று அதிகாலை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.