உக்ரைன் அனல் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா
தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து கடந்த 3 வருடங்களாக ரஷியா - உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது.
போர் தொடங்கியபோது ரஷியா, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றியது.
தற்போது இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் உள்ள ஒரு அனல் மின் நிலையத்தின் மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ரஷ்யா 143 டிரோன்களை ஏவியதாகவும் அதில், 95 டிரோன்களை உக்ரைன் இராணுவம் சுட்டு வீழ்த்தியது என்றும் 46 டிரோன்கள் இலக்கை அடையவில்லை என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.