இதற்கு ரஷ்யா நிச்சயம் விரும்பவில்லை: புடின் கருத்து
உலகப் பொருளாதார அமைப்பை உடைக்க ரஷ்யா விரும்பவில்லை என்றும் புடின் விளக்கினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மீதான படையெடுப்பு குறித்து மாஸ்கோவில் உள்ள உயர்மட்ட வணிகத் தலைவர்களுடன் விவாதித்தார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக அதிகமாக இருப்பதால், வேறு எந்த வகையிலும் பதில் அளிக்க இயலாது என்று விளக்கினார்.
அவர் உக்ரைன் மீதான படையெடுப்பை "தேவையான நடவடிக்கை" என்று விவரித்தார். உக்ரைன் மீதான தாக்குதலானது உலகளாவிய சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்றும் புடின் கூறினார்.
உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், உலகப் பொருளாதார அமைப்பை நாங்கள் பாதிக்க விரும்பவில்லை என்றும் புதின் கூறினார்.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாகவும் புடின் கூறினார்.