ரஷ்யாவில் ஒரே நாளில் 679 பேர் கொரோனாவால் பலி!
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 63 ஆயிரத்து 205 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 679 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 1 கோடியே 11 இலட்சத்து 8 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3இலட்சத்து 26 ஆயிரத்து 112 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 7 இலட்சத்து 58 ஆயிரத்து 475 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றால் 2 ஆயிரத்து 300 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்து 45 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 23 ஆயிரத்து 622 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.