உக்ரைன் மீது பயங்கரமான தாக்குதலை நடத்திய ரஷ்யா: 5 கட்டிடங்கள் சேதம்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24-ம் திகதி முதல் போரை தொடங்கி வருகின்றது.
மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய துருப்புக்கள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது.
அதே வேளையில் ரஷ்யாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல ட்ரோன்களை இடைமறித்து உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன. இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.