உக்ரைனில் மீண்டும் பதற்ற நிலை: குண்டுகளை வீசிய ரஷ்யா! இருவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்றைய தினம் (30-08-2023) வான்வழியாக ரஷ்யா குண்டுகளை வீசியுள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
உயிரிழந்தோரின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கண்ணாடிகள் சிதறி ஒருவர் காயமடைந்ததாகவும் மேயர் கிளிட்ச்கோ கூறினார்.
மேலும், இந்த குண்டுவீச்சில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வான்வெளி தாக்குதல் ஆளில்லா விமானங்களிலிருந்து வந்ததா வேறு வகைகளில் வீசப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கிளிட்ச்கோ கூறினார்.
கடந்த ஆண்டு (2022) பெப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்த போர் தாக்குதல் சற்று குறைந்த இந்த நேரத்தில், இந்த வான்வெளி தாக்குதல் உக்ரைனில் மேலும் போர் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.