120 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசிய ரஷ்யா!
ரஷ்யா உக்ரைனை குறிவைத்து 120 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்காரணமாக உக்ரைன் முழுவதும் வான்வெழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோதிமிர் ஸெலன்ஸ்கி(Volodymyr Zelensky) தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஆலோசகரான மைக்கலோவ் போடோலியாக்(Mykhalov Podoliak), 120 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து வீசப்பட்டதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தாக்குதலில் 14 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், கீவ் நகர மேயர் கூறினார்.
ரஷ்யா வான் மற்றும் கடல் சார்ந்த கப்பல் ஏவுகணைகள் மூலம், பல்வேறு திசைகளை நோக்கி தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைனின் விமானப்படையும் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த தாக்குதலின்போது காமிகேஸ் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.