உக்ரைனில் ராசாயன ஆயுத தாக்குதலை நடத்தவுள்ளதா ரஷ்யா?...வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பு தொடர்பிலானா விவாதமானது எதிர்வரும் வாரத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் பிரதமர்கள் முன்னிலையில் இடம்பெறவுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், உக்ரைன் மீது இரசாயன தாக்குதல் நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக தெரிவித்தார். நேட்டோ உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளனர் என்றார். உக்ரைனில் உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் இருப்பது குறித்து ரஷ்யா "தவறான குற்றச்சாட்டுகளை" முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் காரணமாக ரஷ்யா இரசாயன தாக்குதலை நடத்தலாம் என்றும், இது நேட்டோவுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறினார். அப்படிப்பட்ட சர்வதேச சட்டத்தை ரஷ்யா மீறினால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
எவ்வாறாயினும், உக்ரைன் மீது இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யாவிற்கு நேட்டோ பதிலடி கொடுக்குமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
கிழக்கின் தயார்நிலை மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான கனரக நேட்டோ ஆயுதப் படைகளை சேர்ப்பதன் மூலம் உக்ரைன் எல்லையில் நேட்டோ படைகள் மேலும் பலப்படுத்தப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.