உக்ரைனின் இன்று அதிரடியாக பல ஏவுகணைகளை வீசிய ரஷ்யா!
உக்ரைன் நாட்டின் தெற்கு நகரான மிகோலெய்வ் மீது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்புகளை ரஷ்யா இன்று நடத்தி உள்ளது.
உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது தாக்குதல்கள் நடந்த போதும், உக்ரைனின் மிக பெரிய அணு ஆயுத உலைக்கு அருகே உள்ள நகரம் ஒன்றின் மீதும் ரஷ்யா இன்று அதிரடியாக பல ஏவுகணைகளை வீசி தாக்குதல்களை நடத்தி உள்ளது.
இதனால், கடந்த 24 மணிநேரத்தில் பொது மக்களில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 10 பேர் காயமடைந்து உள்ளனர். உக்ரைனின் 9 பகுதிகள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன.
பிரிவினைவாதிகளால் பிடிக்கப்பட்ட கிழக்கு நகரான டோனெட்ஸ்க் மீதும் ஏவுகணை வீச்சுகள் நடந்துள்ளன.
இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமீப வாரங்களில் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளான மிகோலெய்வ் நகரின் 2 மாவட்டங்கள் மீதும் இன்றைய தினம் (04-08-2022) குண்டு மழை பொழிந்துள்ளன.
மேலும், நிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரின் மைய பகுதியில் உள்ள நிகோபோல் நகர் மீது 60 ஏவுகணைகளை ரஷ்ய துருப்புக்கள் இன்று வீசியுள்ளன. 1.07 லட்சம் பேர் வசிக்க கூடிய இந்த நகரில் 50 குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
சில ஏவுகணைகள் மின் இணைப்பு மீது தாக்கி சென்றதில், மக்கள் பலர் மின் வினியோகம் இன்றி தவித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீப்பர் ஆற்று பகுதியில் அமைந்துள்ள நிகோபால் நகரத்தின் அருகே அந்நாட்டின் மிக பெரிய அணு உலை உள்ளது.
இதனை போரின் தொடக்கத்தில் ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றி இருந்தன. போர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள, அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட நிபுணர்கள் சிலர், இந்த பகுதியை உள்நோக்கத்துடன் ரஷியா தாக்கி வருகிறது.
உக்ரைனை ஒரு கடின சூழ்நிலைக்கு தள்ளவே ரஷ்யா இப்படி செய்கிறது என கூறுகின்றனர்.