கீவ்வில் ரஷ்யா மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்
உக்ரைன் மீதான போரின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ரஷ்யா மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமைச்சரவை கட்டிடத்திற்கு தீ வைத்ததுடன், குடியிருப்புப் பகுதிகளையும் குறிவைத்துத் தாக்கியது.
ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணை
நேற்று அதிகாலையில், ரஷ்யா 800-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 13 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுவரையிலான தாக்குதல்களில், ஒரே நாளில் இவ்வளவு பெரிய அளவில் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியது இதுவே முதல்முறை என கூறப்படுகின்றது.
இந்தத் தாக்குதலில் கீவ் நகரில் உள்ள முக்கிய அரசாங்க கட்டிடமான உக்ரைன் அமைச்சரவை கட்டிடத்தின் கூரையில் தீப்பற்றி எரிந்ததைக் காண முடிந்தது.
இந்தத் தாக்குதலில், குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்ததில் ஒரு தாய் மற்றும் அவரது ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததாக கீவ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ, இந்த தாக்குதல் போரை நீட்டிக்கும் ஒரு வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, உக்ரைன் ரஷ்யாவில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது