5 மாதங்களில் 20000 இற்க்கும் அதிகமான துருப்புக்களை இழந்த ரஷ்யா!
உக்ரேன் யுத்தத்தினால் 5 மாதங்களில் 20000இற்க்கும் அதிகமான ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா திங்கட்கிழமை (01) தெரிவித்துள்ளது.
அதேசமயம் இக்காலப்பகுதியில் 80,000 ரஷ்ய துருப்புக்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அமெரிக்க அகுறிப்பிட்டுள்ளது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில், குறிப்பாக பக்முத் பிராந்தியத்தில் நடந்த மோதல்களில் ரஷ்ய படையினர் இந்த இழப்புகளை எதிர்கொண்டதாக தேசிய பாதுகாப்புப் பேரரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர்
'டொன்பாஸில், குறிப்பாக பக்முக் ஊடாக பாரிய தாக்குதல் நடத்த ரஷ்யா முயற்சித்தது. ஆனால், அது தோல்வியுற்றுள்ளது. உண்மையான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தை ரஷ்யாவினால் கைப்பற்ற முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உயிரிழந்த ரஷ்யர்களில் பெரும்பாலானோர் வாக்னேர் எனும் தனியார் கூலிப்படையின் சிப்பாய்க்ள எனவும் ஜோன் கேர்பி கூறியுள்ளார். இக்கூலிப்படை பெரும்பாலும் ரஷ்ய சிறைக் கைதிகளிலிருந்து சிப்பாய்களை திரட்டுகிறது.
அதேவேளை உக்ரேனியர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்த தகவல்களை தான் வெளியிடப் போவதில்லை என ஜோன் கேர்பி கூறினார். ஏனெனில் 'அவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர். ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர்' எனவும் அவர் கூறினார்.