ரஷ்யாவில் விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில் சீன பிரஜைகள் ; உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவில் ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளில் சீன பிரஜைகள் ஈடுபட்டுள்ளனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை சீனாவிடமிருந்து திருடியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவில் உள்ள ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் சீன பிரஜைகள் என்ன செய்கின்றார்கள் என்ற விபரத்தை சீனாவிற்கு தெரிவிக்குமாறு நான் உக்ரைனின் பாதுகாப்பு சேவையினரை கேட்டுக்கொண்டுள்ளேன் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சீனாவின் ஆளில்லா விமானதயாரிப்பு தொழில்நுட்பத்தை திருடியிருக்கலாம்,சீனாவின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தெரியாமல் சீன பிரஜைகளுடன் உடன்படிக்கைகளை செய்துகொண்டிருக்கலாம் என கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
சீன தொழிநுட்பத்தையே பயன்படுத்துகின்றனர் தங்கள் சகாக்கள் தங்களுடன் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை சீனா அறிவது அவசியம் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.