நெருப்புடன் விளையாடும் ரஷ்யா; பல நாடுகளுக்கு ஏற்படவுள்ள ஆபத்து!
உக்ரைனின் Zaporizhzhia அணுவாலையைத் தாக்குவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அணுவாலையில் பலமுறை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு அனைத்துலக அணுச்சக்தி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பெரிய அளவில் அணுச்சக்திப் பேரிடர் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அது கூறியது.
அந்தத் தாக்குதல்களுக்கு ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்று மற்றொன்றைக் குறைகூறுகின்றன.
அந்த அணுவாலை ரஷ்யாவின் கட்டுப்பட்டில் இருக்கிறது.
இதுவரை எவ்விதக் கதிரியக்கக் கசிவும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்பட்டால் அது பல நாடுகளுக்கு ஆபத்தாகிவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.