தேர்தலை வென்ற கையோடு ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை!
ரஷ்யாவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக முதல் அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அது மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்ற அவர், அப்படி இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப் போருக்குத் தான் இட்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும் இதேபோன்ற கருத்தையே கூறி வரும் நிலையில், இப்போது புடினே இந்த கருத்து கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.