மீண்டும் குண்டுமழை பொழியும் ரஷ்யா!
தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள்
உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து ரஸ்யாவின் பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்ததாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன.100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணை அலை தாக்குதல் என ஜனாதிபதியின் ஆலோசகர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கீவ் ஒடசா உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உட்கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஓடேசா உட்பட பல பிராந்தியங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் ரஸ்யாவின் சமாதான திட்டத்தை உக்ரைன் நிராகரித்த பின்னரே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஸ்யா ஆக்கிரமித்ததை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ரஸ்யா தனது சமாதான திட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.