தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை; ரஷ்யா விளக்கம்
உயர் துல்லியமான ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறோம். தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் உயர் துல்லியமான துல்லியமான ஆயுதங்களை கொண்டு ராணுவ மற்றும் விமான தளங்களை ரஷ்யா தாக்கி வருகிறது.
இதன்படி தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை எனவும் உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.