ரஷியாவின் 'உளவு' திமிங்கலம் உயிரிழப்பு
ரஷியாவின் 'உளவு' திமிங்கலமான ஹ்வால்டிமிர் திமிங்கலம் (whale Hvaldimir) நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு நார்வே கடலில் வெள்ளை திமிங்கலம் ஒன்று உடலில் கேமரா பொருத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த திமிங்கலம் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஹ்வால்டிமிர் (whale Hvaldimir) என்று பெயரிடப்பட்ட அந்த 14 அடி நீளமுள்ள திமிங்கலம் ரஷிய உளவு திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஹ்வால்டிமிர் திமிங்கலம் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திமிங்கலத்தின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை திமிங்கலத்திற்கு (whale Hvaldimir) ரஷ்யா இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        