உக்ரைன் போரில் படைவீரர்கள் பலரை இழந்ததால் ரஷ்யா எடுத்த திடீர் முடிவு!
உக்ரைன் போரில் ரஷ்ய படைவீரர்கள் பலரை இழந்ததால், அவர்களது இடத்தை நிரப்ப உயிரிழந்த வீரர்களின் தந்தையர்களை களத்தில் இறக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது .
அதன்படி , 60 வயது வரையுள்ள, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை இராணுவத்தில் இணையுமாறு ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.
இதுவரை 18,300 ரஷ்யப் படைவீரர்கள் போரில் கொல்லப்பட்டதாகக் உக்ரைன் கூறியுள்ள நிலையில், 15,000 ரஷ்யப் படையினர் இறந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு கருதுகிறது.
இந்நிலையில் இழந்த வீரர்களுக்கு பதிலாக போர் செய்வதற்காக, ரஷ்யா, முன்னாள் இராணுவ வீரர்களை மீண்டும் இராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை புதிதாக இராணுவத்தில் சேர்ந்த 18 முதல் 27 வயது வரையுள்ள அனுபவம் இல்லாத இராணுவ வீரர்கள்தான் ரஷ்ய இராணுவத்தில் கால் பகுதி இருக்கிறார்களாம்.
அனுபவம் அதிகமில்லாத இராணுவ வீரர்கள் ஆயுதங்கள், மருந்துகள் போன்றவற்றை கொண்டு செல்லும் ட்ரக் ஓட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், , அவர்களுடன் செல்லும் 60 வயதுடையவர்களே ஆயுதம் ஏந்தி போரில் ஈடுபடுவார்கள் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.