உக்ரைனில் ரஷ்யா நடத்திய போர்க் குற்றங்கள்: ஜெர்மனியிடம் உள்ள ஆதாரங்கள்
உக்ரைன் நாட்டில் போர்குற்றங்கள் நடந்தமைக்கான ஆதாரங்கள் ஜெர்மனியிடம் உள்ளதாக அந்நாட்டின் அரசு துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பீட்டர் ஃபிராங்க்,
உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
3 இலக்க வரம்பில் ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்த அவர், உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கிய உடனேயே, செயற்கைக்கோள் நகரமான கிய்வ் மீது ரஷ்ய துருப்புக்கள் அட்டூழியங்களைச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
ஜெர்மனி போர் குற்றங்கள் தொடர்பான ஆதரங்களை கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதத்தில் சேகரிக்க தொடங்கியது.
போர் குற்றத்தை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் பிராங்க் வலியுறுத்தினார்.