பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை கொன்ற மாணவனுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
ரஷ்யாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரை கொன்ற மாணவருக்கு ஆயுள் தண்டனை விதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஷியாவின் கசான் நகரில் உள்ள பாடசாலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் 7 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியதில் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவரான இல்னாஸ் கலியாவிவ் என்பவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் நேற்றைய தினம் (13-040-2023) இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது.
இதில் இல்னாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.