ரஸ்ய உளவு விமானம் தொடர்பில் டென்மார்க் அதிருப்தி
ரஸ்யா உளவு விமானம் தொடர்பில் டென்மார்க் அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ரஸ்ய உளவு விமானமொன்று, டென்மார்க் வான் எல்லையில் அத்து மீறி பிரவேசித்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் டென்மார்க்கிற்கான ரஸ்ய தூதுவரை அழைத்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் ஜெப்பே கேபொல்ட் டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இது குறித்து எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான நிலையில் இவ்வாறு ரஸ்யா அத்து மீறி தமது வான் எல்லையில் பிரவேசிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இவ்வாறு டென்மார்க் வான் பரப்பில் ரஸ்ய உளவு விமானம் அத்து மீறி பிரவேசித்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து ரஸ்யா தனது நிலைப்பாட்டை இதுவரையில் வெளியிடவில்லை.