ஐரோப்பிய நாடுகளை பழிவாங்கும் ரஷ்யா; காலவரம்பின்றி நிறுத்தம்!
ரஷ்யா , ஐரோப்பாவுக்கு இயற்கை எரிவாயு அனுப்புவதைக் காலவரம்பின்றி நிறுத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யக் கச்சா எண்ணெய்க்கு விலைவரம்பை நிர்ணயிக்க G7 நாடுகள் ஒப்புக்கொண்ட சில மணிநேரத்தில் மாஸ்கோவின் இந்த முடிவு வந்துள்ளமை ஐரோப்பியரகளை திகைக்க வைத்துள்ளது.
ஏனெனில் விரைவில் ஐரோப்பிய நாடுகளில் குளிகாலம் ஆரம்பிக்க உள்ள நிலையில் ரஷ்யாவில் இந்த முடிவு மக்களை நெருக்கடிக்குள் தள்ளும்.
ரஷ்யாவின் Gazprom எரிவாயு நிறுவனம் நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்படும்வரை அதன் Nord Stream 1 குழாய் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தது.
அதேவேளை அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg) நகரிலிருந்து பால்ட்டிக் (Baltic) கடல் வழியாக ஜெர்மனிவரை செல்கிறது. அதன் வழியாக எரிவாயு விநியோகம் இன்று மீண்டும் தொடங்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பராமரிப்புப் பணி
வழக்கமாக Nord Stream குழாயின் நீராவி இயந்திரங்களைப் பராமரிக்கும் Siemens எரிசக்தி நிறுவனம் எண்ணெய்க் கசிவால் குழாயை அடைக்கத் தேவையில்லை என்று தெரிவித்ததுடன், பழுது ஏற்பட்ட இடத்திலேயே அதனைச் சரிசெய்ய முடியும் என்று அது கூறியது.
அதோடு பராமரிப்புப் பணியில் அது ஒரு வழக்கமான நடைமுறையே என்றும் நிறுவனம் கூறியிருந்தது.
இதற்கிடையே ரஷ்ய எண்ணெய்க்கு உலகளாவிய விலை உச்சவரம்பை விதிக்க உறுதியாய் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.
அத்துடன் மற்ற G7 நாடுகளைப்போலத் தடைகள்மூலம் ரஷ்யாவுக்குத் தொடர்ந்து நெருக்குதல் அளிக்கப்போவதாக வெள்ளை மாளிகைப் பத்திரிகைச் செயலாளர் கேரின் ஜீன் பியர் (Karine Jean-Pierre) கூறினார்.
ஐரோப்பாவில் இன்னும் சில மாதங்களில் குளிர்காலம் வரவிருக்கும் நிலையில் ரஷ்யாவின் இந்த தடைகள் அங்கு எரிசக்தி நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்று அஞ்சப்படுகிறது.